
இப்படி சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்து தகுதி அற்றவர்களைக்கு வேலை தருவதால் தான் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒர்க் செய்ய அவர்கள் நிறைய நேரம் எடுத்து கொள்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் லஞ்சம்(ஊழல்) தலைவிரிதாடுகிறது.
அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்துதான் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.வேறு வழியில்லாம்ல நாமும் ஒருவரை தெர்ந்தெடுக்கிறோம்(அவர்களே கள்ள ஓட்டு போட்டும்).
ஒரு கதை சொல்வார்கள் என் பிள்ளைகளில் நல்லவன் கூரையில் தீ உடன் இருப்பவன்தான் என்று.. அதுபோல தான் நாமும் தகுதி இல்லாத ஒருவரை வேறு வழியில்லாமல் நம்முடய பிரதி நிதியாக தெர்ந்த்தெடுக்ககிறோம்.
அவர்களும் பாகுபாடின்றி ஊழல் செய்கிறார்கள்.
முன்னுரிமை அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு V.C Post(வேலை) தந்ததால் தான் அவருக்கு கல்வி துறையின் புனிதம் தெரியாமல் அதில் ஊழல் செய்துள்ளார்.அவரை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்ய கால தாமதமனாதற்க்கும் காரணம் முன்னுரிமை (சாதி)அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்த வர்களால்தான்.
முன்னுரிமை/இட ஒதுக்கீட்டால் வேலைக்கு சேர்ந்தவர்கள் செய்த தவறுகலுக்கு பல உதரணங்கள் உள்ளன.

இன்று அரசாங்க வேலையிலிருக்கும் பல பேர் அந்த துறையின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் அதில் தவறுகளை செய்கிறார்கள் இதற்க்கு மூல காரணம் இட ஒதுக்கீடுதான்(முன்னுரிமைதான்).
என்னை பொருத்தவரை சாதி அடிப்படையிலான இட ஓதுக்கீட்டை நிறுத்தினால்தான் சாதி என்பது நிரந்தராமாக ஒழியும்.அப்போதுதான் சாதி அற்ற உலகம் உண்டாகும்.
எனக்கு என்னுடைய சாதி என்ன என்பது நான் 10 வகுப்பு படிக்கும் போது கேட்ட சாதி சான்றால் தான் தெரியும்,இதற்க்கெல்லாம் காரணம் சாதி அடிப்படையில் உதவித்தொகை(முன்னுரிமை) தருவதால்தான்.அனைத்து உதவிதொகைளும் வருமானம் அடிப்படையாக கொண்டு மட்டும்தான் இருக்க வேண்டும்.
இன்று பல பேர் சாதி சங்கங்கள் வைத்து சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ...?சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டு தங்களை பொதுநல வாதி என்று பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள்.சாதி ஓழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்!
சாதி ஓழிய வேண்டும் என்று மேடையைல் முழங்குபவர்களுக்கு இது ஏன் புரியவில்லை?.
ஏதாவது மறுமொழிகள் இருந்தால் தெரிவிக்கவும்.