Wednesday, September 30, 2009

உ(எ)ன் இந்தியா..

      இந்தப் பதிவு யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழதவில்லை.என் மனதில் உள்ளதை இங்கு கொட்டுகிறேன்.


சில பிரபலப் பதிவர்கள் "உன் இந்தியா" என்று இந்தியாவை கூறுகின்றனர்.அவர்களின் இன்னும் ஒரு குழப்பமான கருத்து காஷ்மீரில் போய், 'இந்தியாவிலதான் இருக்குன்னு சொல்லிப்பாரு', விழும் அடிக்கான சைஸ்தான் தெரியாது என்பது.

அப்படி எனில் அவர்கள் இந்தியர் இல்லையாம்.அவர்கள் ஏதோ வானத்தில் வாழ்கிறர்களோ?.அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.நண்பர்களே இது சரியா? என்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

இப்படி பேசுபவர்கள் ஒரு விதம் என்றால் அவருடைய நண்பர்களும் கண் மூடித்தனமாக மாப்ளே சொல்லி புட்டான் என்பதால் அது தவறு என்று தெரிந்தும் அவர்களுக்கு ஆதரவாக இந்தியா எனக்கு என்ன செய்தது? என்ற கேள்வி கேட்கின்றனர்.உங்களுக்கு மனம் என்று ஒன்று இருந்தால் அந்த மனத்தின் மீது கை வைத்து கேட்டுபாருங்கள்?.அந்தக் கேள்விக்கு ஆயிரம் பதில்கள் கிடைக்கும்.இந்த விழயத்தில் உங்கள் நண்பர்களை ஆதரித்து பேசுவது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை மறுக்கமுடியாது.

அவர்கள் இந்தியர் இல்லை என்றால்

1.நீங்கள் படிக்கும் போது எங்களைப் போன்ற சாமானிய இந்தியர்களின் இரத்ததின் ஒரு பகுதி உங்களுக்கு மானியமாகவும்,உதவித்தொகையாகவும் வழங்கப் பட்டதே அது உங்களுக்கு ஞபாகம் இல்லையோ?.

2.நீங்கள் படித்து முடித்தவுடன் இந்தியர் என்ற அடைமொழியுடன் ஆஸ்ரேலியா போன்ற நாடுகளில் வேலை செய்கிறிர்களே.அது இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?

3.இந்தியர்களின் வரி பணத்தில் நீங்கள் படித்துவிட்டு இந்திய நாட்டிற்க்கு ஒன்றும் செய்யாமல் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை ஊக்க படுத்தியதே!. நீங்கள் கேட்கலாம் எனக்கு இந்தியா என்ன செய்து என்று?.

4.நீங்கள் இந்தியாவில் மானியதில் வாழ இந்தியா அனுமதிக்கிறதே நீங்கள் கேட்கலாம் உன் இந்தியா என்று?

5.இந்தியர் இல்லை என்றால் எதன் அடிப்படையில் வேலையில் சேர்ந்தீர்கள்?

6.நீங்கள் இந்தியர் இல்லை என்றால் E.B,பாஸ்போர்ட்,இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை,இந்தியாவின் சாலைகள்,சமையல் எரிவாயு ஆகிவற்றை எதன் அடிப்படையில் உபயோக்கிரீர்கள்?.

இப்படி அடுக்கி கொண்டே போக முடியும்..

தாயை பழித்தாலும் தாய் நாட்டை பழிக்கவிடமாட்டேன் என்று சொல்வர்கள்.ஆனால் சிலர் தாய் நாட்டை பழிப்பதை ஹாபியாகவே வைத்துள்ளனர்.

இன்னும் சில பேர் வருமான வரி கட்டாமல் நாட்டை ஏமாற்றுகின்றனர் அதற்க்கும் அவர்கள் சில காரணங்களை சொல்கின்றனர் அதை பற்றி இன்னோரு பதிவில் பார்க்கலாம்.இன்னும் சில பேர் தீவிரவாதத்தையும் மதத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பது.இதைவிட கொடுமையான விழயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.தீவிரவாதி என்பவன் கண்டிப்பாக எந்த மதத்தையும் சார்ந்தவனாக இருக்க முடியாது,வேண்டுமானல் அவன்/அவள் தீவிரவாதியாக் மாறுவதற்க்கு முன்பு அவன் குறிப்பிட்ட மதத்தை சார்ந்து இருக்கலாம்.எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்காது.

தீவிரவாதத்தை மதத்துடன் இனைத்து பார்பவர்கள் மூடர்கள்.நாமும் அவர்களுடைய லிஸ்ட்ல் சேரமல் இருக்க வேண்டும்.

கீழே உள்ள படத்திற்க்கு விளக்கம் தேவையில்லை.




மேற்கண்டவர்களை பற்றி நினைத்தால் பாரதியாரின் குறிப்பிட்ட வரிகள் தான் ஞாபகம் வருகிறது என்ன செய்ய!.




முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

11 comments:

வால்பையன் said...

அவர்கள் இந்தியாவில் பிறக்க இந்தியா தான் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்!
பல உலக அறிஞர்களுக்கு போட்டியாக இந்தியாவை தூக்கி நிமிர்த்த பிறந்தவர்கள் அவர்கள்! அவர்களுக்கு நாம் சரியான முறையில் மரியாதை செலுத்தவில்லை!

அதனால் அவர்களை இனி நாம் ஆண்டேன் என அழைப்போம்! அவர்கள் அறிவுக்கு முன் நாமெல்லாம் அடிமைகள்!

என்னாது இது பார்பனீயத்தின் வேறு வடிவமா!
சே சே அது அவுங்களுக்கு கெட்ட வார்த்தை!

சுரேஷ்குமார் said...

//அவர்கள் இந்தியாவில் பிறக்க இந்தியா தான் புண்ணியம் செய்திருக்க வேண்டுமாம்!
பல உலக அறிஞர்களுக்கு போட்டியாக இந்தியாவை தூக்கி நிமிர்த்த பிறந்தவர்கள் அவர்கள்! அவர்களுக்கு நாம் சரியான முறையில் மரியாதை செலுத்தவில்லை!

அதனால் அவர்களை இனி நாம் ஆண்டேன் என அழைப்போம்! அவர்கள் அறிவுக்கு முன் நாமெல்லாம் அடிமைகள்!

என்னாது இது பார்பனீயத்தின் வேறு வடிவமா!
சே சே அது அவுங்களுக்கு கெட்ட வார்த்தை!
//
சரியாக சொன்னீர்கள்.அவர்களை நாம் ஆண்டேன் என்றுதான் அழைக்கவேண்டுமோ?
நன்றி.

க.பாலாசி said...

//தீவிரவாதத்தை மதத்துடன் இனைத்து பார்பவர்கள் மூடர்கள்.நாமும் அவர்களுடைய லிஸ்ட்ல் சேரமல் இருக்க வேண்டும்.//

உண்மைதான்....

சிந்தனையுள்ள இடுகை அன்பரே...

Sanjai Gandhi said...

அவர்களை எல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை.. ஃப்ரீயா விடுங்க.. :)

சுரேஷ்குமார் said...

நன்றி பாலாஜி

சுரேஷ்குமார் said...

//அவர்களை எல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டியதில்லை.. ஃப்ரீயா விடுங்க.. :)//
நன்றி SanjaiGandhi.அவர்கள் என்றவது ஒரு நாள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

Anonymous said...

tamilnadu endru passport kettal tharuvargala ?

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..நல்ல கருத்துக்கள்தாம்,மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? ம்ஹூம்....

Unknown said...

கவலைப்பட வேண்டியதுதான்
ஆனால் இந்தியாவைப் பத்தி அல்ல, இவர்களைப்பற்றி.

பாவம் இவர்கள்!

kishore said...

திருந்தாத ஜென்மங்கள் யார் சொல்லி திருந்தும்

சுரேஷ்குமார் said...

//tamilnadu endru passport kettal tharuvargala ?
//
தமிழ் நாடு இந்தியாவில் தானே உள்ளது.கண்டிப்பாகத் தருவாங்க.

//பிரியமுடன்...வசந்த்:ம்ம்..நல்ல கருத்துக்கள்தாம்,மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? ம்ஹூம்....
//
அவர்கள் ஏற்றுக்கொள்ள நாம் நம்மால் முடிந்தை செய்ய வேண்டும்.நன்றி வசந்த்

//இளைய கரிகாலன்:கவலைப்பட வேண்டியதுதான்
ஆனால் இந்தியாவைப் பத்தி அல்ல, இவர்களைப்பற்றி.

பாவம் இவர்கள்!
//
சரிய சொன்னீங்க கரிகாலன்.வருகைக்கு நன்றி.

//Kishore:திருந்தாத ஜென்மங்கள் யார் சொல்லி திருந்தும
//
அவர்கள் ஏற்றுக்கொள்ள நாம் நம்மால் முடிந்தை செய்ய வேண்டும்.நன்றி Kishore

Post a Comment