Thursday, September 3, 2009

இட ஒதுக்கீடு தேவையா?

இன்று சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதற்க்கு நம் நாட்டில் உள்ளவர்கள் சொல்லும் முக்கியாமான காரணங்களில் ஒன்று பல நூறு ஆண்டுகள் அடிமை பட்டு இருந்தவர்கள் முன்னேற வேண்டும் எனறுதான்.இப்படியே போனால் சில ஆண்டுகள் கழித்து இன்று உயர்ந்தவர் என்று சொல்பவர்கள் தாழ்ந்தவர்களாக மாறுவார்கள்.அப்போது அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்(கவர்ணமெண்ட் மற்றும் சிலரின் வாதம் படி).இப்படியே போனால் சாதி ஒழிய எந்த வாய்ப்பும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.




இப்படி சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்து தகுதி அற்றவர்களைக்கு வேலை தருவதால் தான் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒர்க் செய்ய அவர்கள் நிறைய நேரம் எடுத்து கொள்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் லஞ்சம்(ஊழல்) தலைவிரிதாடுகிறது.

அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்துதான் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.வேறு வழியில்லாம்ல நாமும் ஒருவரை தெர்ந்தெடுக்கிறோம்(அவர்களே கள்ள ஓட்டு போட்டும்).

ஒரு கதை சொல்வார்கள் என் பிள்ளைகளில் நல்லவன் கூரையில் தீ உடன் இருப்பவன்தான் என்று.. அதுபோல தான் நாமும் தகுதி இல்லாத ஒருவரை வேறு வழியில்லாமல் நம்முடய பிரதி நிதியாக தெர்ந்த்தெடுக்ககிறோம்.
அவர்களும் பாகுபாடின்றி ஊழல் செய்கிறார்கள்.

முன்னுரிமை அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு V.C Post(வேலை) தந்ததால் தான் அவருக்கு கல்வி துறையின் புனிதம் தெரியாமல் அதில் ஊழல் செய்துள்ளார்.அவரை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்ய கால தாமதமனாதற்க்கும் காரணம் முன்னுரிமை (சாதி)அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்த வர்களால்தான்.
முன்னுரிமை/இட ஒதுக்கீட்டால் வேலைக்கு சேர்ந்தவர்கள் செய்த தவறுகலுக்கு பல உதரணங்கள் உள்ளன.



இன்று அரசாங்க வேலையிலிருக்கும் பல பேர் அந்த துறையின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் அதில் தவறுகளை செய்கிறார்கள் இதற்க்கு மூல காரணம் இட ஒதுக்கீடுதான்(முன்னுரிமைதான்).

என்னை பொருத்தவரை சாதி அடிப்படையிலான இட ஓதுக்கீட்டை நிறுத்தினால்தான் சாதி என்பது நிரந்தராமாக ஒழியும்.அப்போதுதான் சாதி அற்ற உலகம் உண்டாகும்.

எனக்கு என்னுடைய சாதி என்ன என்பது நான் 10 வகுப்பு படிக்கும் போது கேட்ட சாதி சான்றால் தான் தெரியும்,இதற்க்கெல்லாம் காரணம் சாதி அடிப்படையில் உதவித்தொகை(முன்னுரிமை) தருவதால்தான்.அனைத்து உதவிதொகைளும் வருமானம் அடிப்படையாக கொண்டு மட்டும்தான் இருக்க வேண்டும்.

இன்று பல பேர் சாதி சங்கங்கள் வைத்து சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ...?சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டு தங்களை பொதுநல வாதி என்று பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள்.சாதி ஓழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்!

சாதி ஓழிய வேண்டும் என்று மேடையைல் முழங்குபவர்களுக்கு இது ஏன் புரியவில்லை?.

ஏதாவது மறுமொழிகள் இருந்தால் தெரிவிக்கவும்.

7 comments:

Unknown said...

உண்மைதான், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வரவேண்டும். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அன்றைய காலத்தேவையாக இருந்தது என்பதை, மறுக்கவும் மறைக்கவும் முடியாது. ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது.

சுரேஷ்குமார் said...

//ஆனால் பொருளாதார அளவுகோள் மட்டுமே போதாது

நன்றி நளன் அவர்களே.சாதி என்ற அளவுகோளை பயன் படுத்த கூடாது என்பதுதான் என் விருப்பம்.

ssk said...

சாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)
சங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே.

கபிலன் said...

"Siva said...
சாதியை கண்டுபிடித்து அதை சாகவிடாமல் பிடித்து கொண்டு இருப்பது பார்பன கூட்டமே. இதை வருடம் தோறும் பூணுலை மாற்றி போட்டு வேறு உறுதி பண்ணுகிறது. அத்தனை இழிவையும் செய்து விட்டு யோக்கிய சிகாமணி போல் பேசும் பார்பன கூட்டம் இப்போதும் தன் வேலையை காட்டி வருகிறது. (சேது, சிதம்பரம், இட ஒதுக்கீடு , இன்னும் எவ்ளவோ)
சங்கரச்சாரி செய்த வேலையை வேறு யாரும் செய்து விட்டு லோக குருவாக வெளியே வர முடியுமா... இன்றும் சுப்ரீம் கோர்ட்டில் முதல் கொண்டு சாதரண தெரு கோவில் வரை பொய் பேசி எல்லா ஏமாற்று வேலை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் இருப்பது பார்பனியமே."

வீட்ல சாம்பார் ஊசி வந்துட்டாலோ, தோசை தீஞ்சி போய்ட்டாலோ கூட உங்களுக்கு பார்ப்பனியம் தான் காரணம். இவ்வளவு பேசின நீங்கள் இட ஒதுக்கீடு பற்றி ஒண்ணுமே சொல்லலிங்களே : )

Anonymous said...

i agree this

சுரேஷ்குமார் said...

நன்றி maha.

Natrajan said...

ஏழைகளுக்கு படிப்பதற்கான பொருளாதார உதவி செய்யலாம் மற்றும் சலுகைகள் வழங்கப்படலாம். அதை விடுத்து படிப்பறிவில் குறைந்தவர்களை ஜாதியின் பெயரால் ஆசிரியர் பதவியில் உட்காருவதினால், தற்போது நன்றாக விளங்கிற்று.. ஆசியரே மந்தமாம். மாணக்கர் மட்டும் என்ன அறிவு ஜீவியாகவா வருவார்கள். அல்லது இதனால் மட்டும் வேற்றுமை விலகிடுமா? வாழ்க நாடு.

Post a Comment