Wednesday, September 30, 2009

உ(எ)ன் இந்தியா..

      இந்தப் பதிவு யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழதவில்லை.என் மனதில் உள்ளதை இங்கு கொட்டுகிறேன்.


சில பிரபலப் பதிவர்கள் "உன் இந்தியா" என்று இந்தியாவை கூறுகின்றனர்.அவர்களின் இன்னும் ஒரு குழப்பமான கருத்து காஷ்மீரில் போய், 'இந்தியாவிலதான் இருக்குன்னு சொல்லிப்பாரு', விழும் அடிக்கான சைஸ்தான் தெரியாது என்பது.

அப்படி எனில் அவர்கள் இந்தியர் இல்லையாம்.அவர்கள் ஏதோ வானத்தில் வாழ்கிறர்களோ?.அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டே இந்தியாவின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள்.நண்பர்களே இது சரியா? என்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.

இப்படி பேசுபவர்கள் ஒரு விதம் என்றால் அவருடைய நண்பர்களும் கண் மூடித்தனமாக மாப்ளே சொல்லி புட்டான் என்பதால் அது தவறு என்று தெரிந்தும் அவர்களுக்கு ஆதரவாக இந்தியா எனக்கு என்ன செய்தது? என்ற கேள்வி கேட்கின்றனர்.உங்களுக்கு மனம் என்று ஒன்று இருந்தால் அந்த மனத்தின் மீது கை வைத்து கேட்டுபாருங்கள்?.அந்தக் கேள்விக்கு ஆயிரம் பதில்கள் கிடைக்கும்.இந்த விழயத்தில் உங்கள் நண்பர்களை ஆதரித்து பேசுவது நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை மறுக்கமுடியாது.

அவர்கள் இந்தியர் இல்லை என்றால்

1.நீங்கள் படிக்கும் போது எங்களைப் போன்ற சாமானிய இந்தியர்களின் இரத்ததின் ஒரு பகுதி உங்களுக்கு மானியமாகவும்,உதவித்தொகையாகவும் வழங்கப் பட்டதே அது உங்களுக்கு ஞபாகம் இல்லையோ?.

2.நீங்கள் படித்து முடித்தவுடன் இந்தியர் என்ற அடைமொழியுடன் ஆஸ்ரேலியா போன்ற நாடுகளில் வேலை செய்கிறிர்களே.அது இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?

3.இந்தியர்களின் வரி பணத்தில் நீங்கள் படித்துவிட்டு இந்திய நாட்டிற்க்கு ஒன்றும் செய்யாமல் வெளி நாடுகளுக்கு வேலைக்கு செல்வதை ஊக்க படுத்தியதே!. நீங்கள் கேட்கலாம் எனக்கு இந்தியா என்ன செய்து என்று?.

4.நீங்கள் இந்தியாவில் மானியதில் வாழ இந்தியா அனுமதிக்கிறதே நீங்கள் கேட்கலாம் உன் இந்தியா என்று?

5.இந்தியர் இல்லை என்றால் எதன் அடிப்படையில் வேலையில் சேர்ந்தீர்கள்?

6.நீங்கள் இந்தியர் இல்லை என்றால் E.B,பாஸ்போர்ட்,இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அடையாள அட்டை,இந்தியாவின் சாலைகள்,சமையல் எரிவாயு ஆகிவற்றை எதன் அடிப்படையில் உபயோக்கிரீர்கள்?.

இப்படி அடுக்கி கொண்டே போக முடியும்..

தாயை பழித்தாலும் தாய் நாட்டை பழிக்கவிடமாட்டேன் என்று சொல்வர்கள்.ஆனால் சிலர் தாய் நாட்டை பழிப்பதை ஹாபியாகவே வைத்துள்ளனர்.

இன்னும் சில பேர் வருமான வரி கட்டாமல் நாட்டை ஏமாற்றுகின்றனர் அதற்க்கும் அவர்கள் சில காரணங்களை சொல்கின்றனர் அதை பற்றி இன்னோரு பதிவில் பார்க்கலாம்.இன்னும் சில பேர் தீவிரவாதத்தையும் மதத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பது.இதைவிட கொடுமையான விழயம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது.தீவிரவாதி என்பவன் கண்டிப்பாக எந்த மதத்தையும் சார்ந்தவனாக இருக்க முடியாது,வேண்டுமானல் அவன்/அவள் தீவிரவாதியாக் மாறுவதற்க்கு முன்பு அவன் குறிப்பிட்ட மதத்தை சார்ந்து இருக்கலாம்.எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிக்காது.

தீவிரவாதத்தை மதத்துடன் இனைத்து பார்பவர்கள் மூடர்கள்.நாமும் அவர்களுடைய லிஸ்ட்ல் சேரமல் இருக்க வேண்டும்.

கீழே உள்ள படத்திற்க்கு விளக்கம் தேவையில்லை.
மேற்கண்டவர்களை பற்றி நினைத்தால் பாரதியாரின் குறிப்பிட்ட வரிகள் தான் ஞாபகம் வருகிறது என்ன செய்ய!.
முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Monday, September 14, 2009

பொதுத்தேர்வு ரத்து சரியா?

நடப்பு கல்வியாண்டு மட்டும் சி.பி.எஸ்.இ., பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அடுத்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு கிடையாது என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண்களுக்கு பதில் கிரேடிங் முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் அறிவிப்பின்படி, இனி ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர், வேறு பள்ளிக்கு மாற நினைத்தாலோ, அல்லது வேறு படிப்புகளில் சேர நினைத்தாலோ அவர்களுக்கென, ஆன்-லைன் மூலம் சி.பி.எஸ்.இ., தேர்வுகளை நடத்தி, சான்றிதழ்களை வழங்கும்.இதனால் ஏற்படும் சாதக,பாதகங்களை பார்ப்போம்.

சாதகங்கள்:
பொதுத்தேர்வு என்ற மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் கண்டிப்பாக விடுபடுவர்.இதனால் மாணவர்களின் தற்கொலைகள் குறையும் என்பது மறுப்பதற்கில்லை.


பாதகங்கள்:

1.நாம் வேலையை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிக்கவேண்டும் என்றால்தான் முடிப்போம்.நாம் அப்படிதான் வளர்ந்துள்ளோம்.பிளஸ் 2 வரை பொதுத்தேர்வு இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்?.சும்மா..பேருக்குத்தான் படிப்போம்.இப்படியே போனால் மாணவர்களின் கல்வி தரம் குறையுமல்லவா?.

2.ஒரு மாணவன் 1 வகுப்பு முதல் ஓரே பள்ளில் படிப்பதாக வைத்துக்கொள்வோம்.ஆரம்ம காலங்களில் குறிப்பிட்ட மாணவர் சரியாக படிக்காமால் இருந்து 8 ம் வகுப்புக்குமேல் ஒழுங்க படிக்க ஆரமிக்கலாம் ஆனால் அந்த மாணவரை பற்றிய எண்ணம் ஆசிரியர்களுக்கு மாறமல் இருக்க வாய்ப்பு உண்டு.உதாரணத்திற்க்கு என்னை எடுத்து கொள்ளுங்கள் நான் 9-ம் வகுப்பு வரை ரேங்க் ன்னா-என்ன விலைன்னு கேட்பேன்?.ஆனால் பத்தாம் வகுப்பு வந்து ஒரளவு நன்றாகவே படிக்க ஆரம்பித்தேன். ஆனால் நான் வகுப்பில் 35-வது ரேங்க் மேல்தான் எடுப்பேன் காரணம் நாம் 9-வது வரை அப்படி இருந்தோம்ல்லா..?என்னை பற்றி தெரியாத ஆசிரியர் என் பேப்பரை திருத்தியதால் நான் பொது தேர்வில் பள்ளில் 3-வதாக வந்தேன்(சும்மா சுய விளம்பரம் தாங்க...).

3.மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையும்.
பொதுவாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒருவரின் வாழ்க்கை நிர்ணயிப்பதாக உள்ளது.நேராக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதால் பொதுத்தேர்வு பற்றிய பயம்,அனுபவமின்மை காரணமாக தேர்வை ஒழுங்காக எழுதாமல் போக வாய்ப்பு உண்டு இதனால் விரும்பிய மேல் படிப்பு கிடைக்காமல் போகும்.10 ம் வகுப்பில் பொதுத்தேர்வு இருந்தால் மாணவர்கள் தாங்கள் செய்த தறுகளை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். நேரடியாக பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவது என்பது மாணவர்களுக்கு பெரிய பாதிப்பையே ஏற்படுத்தும்.

4.பிளஸ் 1 விரும்பிய குருப் கிடைக்குமா? பிளஸ் 1 சேர்க்கைக்கு முக்கிய காரணியாக பத்தாம் வகுப்பு மார்க் தேவைப்படுகிறது.ஒரு குறிப்பிட்ட குரூப்க்கு போட்டி அதிகமாக இருக்கும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்லை என்றால் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு தெரிந்தவர்கள் மற்றும் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே விருப்பிய குருப் கிடைக்கும் நிலையுருவாகும்.மற்றவர்களின் நிலை..?.

5.கிரேடிங் முறையால் மாணவர்களிடயே ஆரோக்கியமான போட்டி இருக்காது.
கிரேடிங் முறையால் நன்றாக படிக்கிற மாணவர்களுக்கும், சுமாராக படிக்கிற மாணவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் இனி கிடைக்காது.சுமாராக படிக்கிற மாணவர்கள் தாம் சுமாராதான் படிக்கிறோம் என்று கூட அவர்களால் அறிந்து திருத்திக் கொள்ள வாய்ப்புயில்லாமல் போகிவிடும்.நாமெல்லாம் நம்முடன் நன்றாக படித்தவர்களின் மார்க் பார்த்துதானே இன்னும் நன்றாக படிக்கவேண்டும் என்று படித்தோம்!.

6.பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு, மாநில கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள், எந்த வகையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்? ஒரே கிரேடிங்க்குள் ஆயிரம் மாணவர்கள் இடம்பெறுவர். எதன் அடிப்படையில் அவர்களின் ரேங்க் வெளியிடப்பட்டு சேர்க்கை நடைபெறும் என்று தெரியவில்லை.


இதை நடைமுறை படுத்துவதில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.நம் இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் உயர்ந்த நிலையிலிருக்க முக்கியக் காரணங்களில் ஒன்று நமது கல்வி முறையே.
பொதுத்தேர்வு தேவையில்லை என்பது சரியான முடிவாக தெரியவில்லை.இதை சம்மந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா.?

முழுவதும் படித்தீர்களா பிடித்திருந்தால் உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

Thursday, September 3, 2009

இட ஒதுக்கீடு தேவையா?

இன்று சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவதற்க்கு நம் நாட்டில் உள்ளவர்கள் சொல்லும் முக்கியாமான காரணங்களில் ஒன்று பல நூறு ஆண்டுகள் அடிமை பட்டு இருந்தவர்கள் முன்னேற வேண்டும் எனறுதான்.இப்படியே போனால் சில ஆண்டுகள் கழித்து இன்று உயர்ந்தவர் என்று சொல்பவர்கள் தாழ்ந்தவர்களாக மாறுவார்கள்.அப்போது அவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்(கவர்ணமெண்ட் மற்றும் சிலரின் வாதம் படி).இப்படியே போனால் சாதி ஒழிய எந்த வாய்ப்பும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
இப்படி சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்து தகுதி அற்றவர்களைக்கு வேலை தருவதால் தான் நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட ஒர்க் செய்ய அவர்கள் நிறைய நேரம் எடுத்து கொள்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் லஞ்சம்(ஊழல்) தலைவிரிதாடுகிறது.

அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் முன்னுரிமை தந்துதான் தங்கள் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறார்கள்.வேறு வழியில்லாம்ல நாமும் ஒருவரை தெர்ந்தெடுக்கிறோம்(அவர்களே கள்ள ஓட்டு போட்டும்).

ஒரு கதை சொல்வார்கள் என் பிள்ளைகளில் நல்லவன் கூரையில் தீ உடன் இருப்பவன்தான் என்று.. அதுபோல தான் நாமும் தகுதி இல்லாத ஒருவரை வேறு வழியில்லாமல் நம்முடய பிரதி நிதியாக தெர்ந்த்தெடுக்ககிறோம்.
அவர்களும் பாகுபாடின்றி ஊழல் செய்கிறார்கள்.

முன்னுரிமை அடிப்படையில் அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு V.C Post(வேலை) தந்ததால் தான் அவருக்கு கல்வி துறையின் புனிதம் தெரியாமல் அதில் ஊழல் செய்துள்ளார்.அவரை வேலையிலிருந்து பணி நீக்கம் செய்ய கால தாமதமனாதற்க்கும் காரணம் முன்னுரிமை (சாதி)அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்த வர்களால்தான்.
முன்னுரிமை/இட ஒதுக்கீட்டால் வேலைக்கு சேர்ந்தவர்கள் செய்த தவறுகலுக்கு பல உதரணங்கள் உள்ளன.இன்று அரசாங்க வேலையிலிருக்கும் பல பேர் அந்த துறையின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் தெரியாமல் அதில் தவறுகளை செய்கிறார்கள் இதற்க்கு மூல காரணம் இட ஒதுக்கீடுதான்(முன்னுரிமைதான்).

என்னை பொருத்தவரை சாதி அடிப்படையிலான இட ஓதுக்கீட்டை நிறுத்தினால்தான் சாதி என்பது நிரந்தராமாக ஒழியும்.அப்போதுதான் சாதி அற்ற உலகம் உண்டாகும்.

எனக்கு என்னுடைய சாதி என்ன என்பது நான் 10 வகுப்பு படிக்கும் போது கேட்ட சாதி சான்றால் தான் தெரியும்,இதற்க்கெல்லாம் காரணம் சாதி அடிப்படையில் உதவித்தொகை(முன்னுரிமை) தருவதால்தான்.அனைத்து உதவிதொகைளும் வருமானம் அடிப்படையாக கொண்டு மட்டும்தான் இருக்க வேண்டும்.

இன்று பல பேர் சாதி சங்கங்கள் வைத்து சாதிய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள் ...?சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கேட்டு தங்களை பொதுநல வாதி என்று பறைசாற்றி கொண்டிருக்கிறார்கள்.சாதி ஓழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்!

சாதி ஓழிய வேண்டும் என்று மேடையைல் முழங்குபவர்களுக்கு இது ஏன் புரியவில்லை?.

ஏதாவது மறுமொழிகள் இருந்தால் தெரிவிக்கவும்.