Friday, August 28, 2009

டெலிஃபோன் ஓயரா பாசக் கயிரா!

நண்பர்களே இது என் கன்னி முயற்சி. இந்த பதிவில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நம் நாட்டில் அரசாங்க ஊழியர்களின் கடமை உணர்ச்சியை இந்த பதிவில் சொல்ல போகிறேன்.எனது அலுவலகம் தி.நகரில் உள்ளது.எனது எழில் கொஞ்சும் வீடு(மனைவி அருகிலிருக்கும் போது பொய் சொல்லிதானே ஆகனும் சும்மா சொன்னெங்க உண்மையாகவே என் வீடுதான் எனக்கு சொர்க்கம்) ஆதம்பாக்கத்தில் உள்ளது.நான் அன்று அலுவலகத்திற்க்கு எனது பைக்கில் சென்றேன்.அன்று அந்தி சாய்ந்த நேரம் அதிசயமாக சென்னையில் இடியுடன் மழை சோஓஓ..! வென கொட்டியது.நாங்கள் ஆபீஸீல் பேஸ்மென்டில் இருந்ததால் ரசிக்க முடியவிலை(சத்தியமா மழை தான் சொல்றேன்....ஹி..ஹி).சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது.இரவு 7:00 மணி இருக்கும் போது வீட்டிற்க்கு செல்லலாமென்று நானும் என் நண்பர் கதிரேசனும் மேலே வந்தோம்(கார் பார்கிங்கு).தூரல் லேசாகயிருந்தது. தூரல் விட்டவுடன் போகலாமென்று சிறிது நேரம் இன்றைய நடிகர்களின்(விஜயகாந்த்,விஜய்,சிரஞ்சீவீ) அரசியல் பிரவேசம் பற்றி பேசி கொண்டுயிருந்தோம்.தூரல் விடுவதாயில்லை சரி புறப்படலாம் என்று எனது வாகனமான பைக்கை எடுத்தேன்.அதிசயாமாக தூரல் நின்று விட்டது.


அண்ணா சாலையில் வாகனங்கள் எல்லாம் ஊர்ந்து சென்றன.நானும் அதில் மெதுவாக சென்றென்.பொதுவாக நான் அண்ணா சாலையில் செல்லும் போது கூட்டாமாக இருக்கும்,அதுவும் மழை பெய்ந்து ஓய்ந்து விட்டால் சொல்லவா வேண்டும்.அண்ணா சாலையைய் கடந்து ரேஸ் கோர்ஸை அடைய சுமார் 45 நிமிடங்கள் பிடித்தது.


பொதுவாக ஞாயிறு என்றால் கூட்டமாக இருக்கும்,ஏனேன்றால் இன்னும் குதிரை வாயில் பணம் கட்டும் கூட்டம் நம் சென்னையில் இருந்த்து கொண்டுதான் இருக்கிறது.நல்ல வேளை அன்று வெள்ளிக்கிழைமை தப்பித்தேன்.ஒரளவு கூட்டம் குறைவாகதான் இருந்தது.

அப்பாடா! நாம் நம் ஏரியா வந்துவிட்டோம் என்று நிம்மதியாக இருந்தது.ஏனென்றால் வாகன கூட்டத்திலிருந்து மனிதன் வசிக்கும் ஏரியாவிற்க்கு வந்துவிட்டோம் என்ற ஓருஆனந்த்ம் தான்!.


ரேஸ் கோர்ஸிலிருந்து என்.ஜி.ஓ காலனி செல்லும் வரை எல்லாம் நல்ல படியாகதான் இருந்தது!.என்.ஜி.ஓ காலனியை கடந்து சென்றபோது திடீரென ஏதோ ஒன்று கருப்பு நிறத்தில் அறுந்து விழுந்து என் கழுத்தில் மாட்டியது.என்னுடய எண்ணம் எல்லாம் வண்டியை நிறுத்துவதில் குறியாய் இருந்தது.நல்ல வேளை நான் மெதுவாக சென்றதால் 10 அடிக்குள் வண்டியை நிறுத்தி விட்டடேன்.அதற்க்குள் என் பின்னால் வந்த வாகனங்களும் நின்று விட்டன.அதற்க்குள் என்னை சுற்றி கூட்டம் கூடிவிட்டது.என் தலை கவசத்தை கழட்டி விட்டு அது என்ன ? என்று பார்த்தேன்.ஆஹா இது டெலிஃபோன் ஓயராச்சே! என்று நான் மெதுவாக என் கழுத்திலிருந்த அந்த டெலிஃபோன் ஓயரை எடுத்தேன்.அதற்க்குள் என் பின்னால் காரில் வந்த பயபுள்ளைக்கு என்ன அவசரமோ ஹரான் அடித்து கொண்டே இருந்தார்.அருகில் இருந்த கடைக்காரர் அந்த கார் டிரைவரையை பார்த்து உனக்கு யார் உயிர் போனாலும் பரவாயில்லை நீ செல்லவேண்டுமா என்று கத்தினார்.


நான் ரோட்டை விட்டு ஒரமாக சென்று என் வாகனத்தை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினேன்.அந்த கார் நண்பர் சென்றுவிட்டார்.கழுத்தை லேசாக தடவினேன்,ஏதோ எரிவது போல இருந்தது.டெலிஃபோன் கம்பத்தை அருகில் சென்று பார்த்தேன் பயந்துவிட்டேன்.ஏற்கனவே பல அறுந்த ஒயர்கள் அந்த கம்பத்தில் கட்டி இருந்தன,அருகிலிருந்தவரிடம்(கடைகராரிடம்) ஏன் இவ்வளவு ஒயர்கள் கட்டியிருக்குனு கேட்டேன்?.அவர் சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது?

ரொம்ப நாளா இப்படிதான் இருக்கு,பல பேர் மேல இந்த ஒயர்கள் அறுந்து விழுந்து இருக்கு.உங்களுக்காவது பரவாயில்லை ஒன்னும்மாகலை(என் மேல் அவருக்கு என்ன கோபமோ ஒன்னுமாகலைன்னு பீல் பண்றாறேய் ...சும்மாதான் சொல்றேன் அவர் ரொம்ப அப்பாவி) சில பேர் ரத்தம் சொட்ட ஹொஸ்பிட்டல் போயிருக்காங்க என்று சொன்னார்.ஏன் யாரும் புகார் எதுவும் தரவில்லயா? என்று கேட்டேன்.

அவர் ரொம்ம கோபமாக எந்த கவர்மெண்ட் வேலை செய்றவங்க ஒழுங்க வேலை செய்யாறாங்க என்று ........ஏக வசனத்தில் திட்டினார்.பல முறை கம்பளைண்ட் செய்தும் யாரும் வரவில்லையாம்.அவனுங்க எல்லாம் கிம்பலம் இல்லாம ஒர்க் பன்னமாட்டாங்கப்பா! அதுவும் இல்லாம நாம அவனுங்கள்ள கெஞ்சி கூப்படுனும்,அப்படியே வந்தாலும் பேருக்கு இழுத்து கட்டிட்டு போயிறாங்க.பல முறை வந்து கட்டி விட்டு போயிருங்க.இப்பல்லாம் புகார் தருவதை நிறுத்திட்டோம் அதான் இவ்வளவு ஒயர் கட்டி இருக்கு என்றார்.சரி என்று வீட்டிற்க்கு சென்றுவிட்டேன்.


வீட்டில் கண்ணாடியில் பார்த்தபோது அந்த ஓயருக்கு என் மேல் என்ன பாசமோ என் கழுத்தை(குரல் வளையை) லேசாக பதம் பார்த்தது,ஆனால் எப்போதோ நான் செய்த புண்ணியம் குருதி (Blood)வரவில்லை.சரியன்று ஹாஸ்பிட்டல் சென்று பார்த்தேன்,நல்ல வேலை லேசான காயம்தான், ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று சொல்லி ஆயில் மெண்டும்,ஒரு ஊசி போட்டு அனுப்பினார் டாக்டர்.தலைக்கு வந்தது தலைபாகையுடன் போய் விட்டது! என்று நினைத்தேன்(வேறென்ன செய்வது).

விடிந்தவுடன் டெலிஃபோன் ஆபிஸ் போகவேண்டும் என்று நினைத்து கொண்டே தூங்கிவிட்டேன்.மறு நாள் காலை 10 மணிக்கு டெலிஃபோன் ஆபிஸ் சென்றேன்,ப்யூன் தான் இருந்தார்.தலைமை அலுவலர் எப்போது வருவார் என்று கேட்டதுக்கு வருவார் வெயிட் பன்னுங்கனு சொல்லிவிட்டு வெடுக்கென (என் பதிலுக்கு காத்திறாமல்) சென்று விட்டார்.காத்து இருந்தேன்!.சுமார் 10:45 மணிக்கு தலைமை அலுவலர் வந்தார் அவரிடம் நடந்ததை சொல்லி என் கழுத்தை கான்பித்தேன்.அவர் அப்படியா என்று எந்த சலனமும் இல்லாமல் இருந்தார்.என்ன செய்யாலாம்? என்று என்னிடமே கேள்வி கேட்டார்.

நான் கோபமாக அதை சரி செய்ய வேண்டாமா? என்று கேட்டேன்.எல்லாம் சரி பண்ணுவாங்க போங்க என்றார்.அதற்கு மேல் அவரிடம் பேசுவது வேஸ்ட் என்று வந்து விட்டேன்.

சில பேர் ஓயர் அறுந்து விழுந்து இறந்து இருகங்க என்று என் ஆபீஸ் நண்பர்கள் சொன்னார்கள்.அந்த காயம் ஆறுவதற்க்கு 15 நாட்களாயின.இன்னும் அந்த போஸ்ட் அப்படியேதான் உள்ளது.இப்போதும் அந்த இடம் வரும் போது தன்னாலே என்னை பயம் அட்கொள்ளும்.

இதற்கெல்லாம் காரணம் என்ன சில அரசு ஊழியரின் மெத்தனப்போக்குதான்.அவர்களின் சோம்பேரி தனம்தான்...இதனால்தான் பல பேர் அரசு துறை சேவையைவிட்டுவிட்டு தனியார் துறையை நாடுகின்றனர்.சில அரசு ஊழியர்கள் தங்களை ஆண்டவனை போல....இல்லை! இல்லை!! ஆண்டவனுக்கும் மேலாக நினைக்கிறார்கள்.அவர்களை திருத்துவது எப்படி?.இப்படியே போனால் அந்த ஆண்டவனாலும் இந்த அரசு துறைகளை காப்பற்ற முடியாது என்று ஏன் அவர்களுக்கு தெரியவில்லை?தங்களுக்கு உணவு ,வசதி தரும் வேலையை ஏன் ஒழுங்காக செய்யமாட்ராங்க?.

ஆஹா என்னே நம்ம அரசாங்க ஊழியர்களின் கடமை உணர்ச்சி!

3 comments:

sutharshan said...

சுரேஷ் குமார்.. உங்கள் கன்னி முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.. நானும் உங்களைப் போலத்தான்... நீங்கள் பின்னூடம் எழுதிய எனது பதியும் கன்னிப் பதிவே.. இன்னும் நன்றாக எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்

க.பாலாஜி said...

//இதற்கெல்லாம் காரணம் என்ன சில அரசு ஊழியரின் மெத்தனப்போக்குதான்.அவர்களின் சோம்பேரி தனம்தான்...இதனால்தான் பல பேர் அரசு துறை சேவையைவிட்டுவிட்டு தனியார் துறையை நாடுகின்றனர்//

உண்மைதான்...இது அதிகாரிகளின் மெத்தனப்போக்குதான்...இந்த வேலை பார்க்குறத்துக்கே இவங்களுக்கு சம்பளம் பத்தலையாம்...எங்கபோய் சொல்றது...

வாழ்த்துக்கள் நண்பரே...

சுரேஷ்குமார் said...

நன்றி பாலாஜி

Post a Comment